
பியோதர் தஸ்தயேவ்ஸ்கி;
நவம்பர் 11, 1821 இல் ரஷ்யாவின் மாஸ்கோவில் பிறந்தவர், 1881 இல் தனது 59 ஆம் வயதில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இறந்தார். இவருடைய உலகப் புகழ் பெற்ற படைப்புக ள், "நோட்ஸ் ஃப்ரம் அண்டர்கிரௌண்ட்"," கிரைம் அண்ட் பணிஷ்மென்ட்( குற்றமும் தண்டனையும்)", "தி இடியட்", "தி பிரதர்ஸ் கரமசோவ்(கரமசோவ் சகோதரர்கள்)", "தி பொஸெஸ்ட்(பீடிக்கப்பட்டவன்)" ஆகியன.
குற்றமும் தண்டனையும் தமிழில் : எம்.ஏ. சுசீலா பக்கம் : 562, ஆன்லைனில் உடுமலை தளத்தில் கிடைக்கும். |
குற்றவாளியின் மன உலகை விரிவாக ஆய்வு செய்கிறது "குற்றமும் தண்டனையும்" நாவல். "குற்றமும் தண்டனையும்"- ருஷ்ய இலக்கியத்தில் மைல்கல்.உலக இலக்கியத்துக்கு கிடைத்த கருத்து கருவூலம். இருபத்தி ஆறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதிலும் உள்ள வாசகர்கள் பாராட்டப்பட்ட "குற்றமும் தண்டனையும்" நாவல் இந்த நாவல் . இந்நூலில் தஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி சி.மோகன் எழுதிய கட்டுரை அபூர்வ வகையானது!
மரணதண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-1
மரண தண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-2
அசடன் (இடியட்)தமிழில் : எம்.ஏ. சுசீலா ஆன்லைனில் உடுமலை தளத்தில் கிடைக்கும். |
மென்மையான இநத அசடன், இந்த உலகத்தை, அதன் சிந்தனைப் போக்குகளை, உணர்வுகளை, இங்கு வாழும் மனிதர்கள் கைக்கொண்டிருக்கும் எதார்த்தத்தை, அவர்கள் காணும் உண்மையை முற்றாக நிராகரிக்கிறான். அவனது உண்மை, அவர்களின் எதார்த்தத்திலிருந்து முழுமையாக வேறுபட்டிருக்கிறது. அவர்களின் எதார்த்தம் அவனது கண்களில் ஒரு நிழலைப் போல மட்டுமே தோற்றம் தருகிறது. முற்றிலும் புதிதான, ஒரு உண்மையான எதார்த்தத்தைக் காண விரும்பி, அதை அவர்களிடம் எதிர்பார்ப்பதினாலேயே அவன் அவர்களின் எதிரியாகிப் போகிறான்.
- ஹெர்மன் ஹெஸ்ஸே